ஜப்பானின் தீவான ஹொக்கைடோவில் இன்று (11) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.0 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 46 கிலோமீற்றர் (28.58 மைல்) ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.