தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் இன்றைய நாட்களில் சர்வ சாதாரணமாக காணப்படுவதாகவும் எனவே, குழந்தைகளுக்கு அதிகளவு திரவ உணவுகளை குடிக்க கொடுக்க வேண்டும் எனவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிடுகிறார்.
வறண்ட காலநிலையுடன் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு காய்ச்சல் போன்ற நோய்களும் பரவக்கூடும் என வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.