கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமான விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
விடைத்தாள் திருத்தப்பணிகளில் நேரடியாக ஈடுபட்ட அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த விடைத்தாள் திருத்தப்பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறையை பெற்றுக் கொள்வதற்காக தங்களது வரவு பதிவேடுகளை கையளிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.