முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர் மற்றும் யுனிசெப் இன் தெற்காசியாவிற்கான பிராந்திய தூதுவருமான சச்சின் டென்டுல்கர் எதிர்வரும் ஒகஸ்ட் 08 ஆம் திகதி கொழும்பு சினமன் லேக்சைட்டில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரவுள்ளார்.
கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் தீவிரமாக செயற்படும் யுனிசெஃப் திட்டங்களில், பிராந்தியத் தூதுவர் எனும் வகையில் சச்சின் முன்னின்று செயற்பட இந்த இலங்கை விஜயமானது அவருக்கு உதவி புரிகிறது.