நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த நீர் வழங்கல் சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி, சில பிராந்திய விநியோக மையங்களில் குறிப்பிட்ட அட்டவணையின்படி நீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று குறித்த சபை தெரிவிக்கின்றது.
சில பகுதிகளில் நீர் பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது.
போதிய நீர் இல்லாததால் நீர் வழங்கல் சபையால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.