தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்து ஐந்து வாரங்களேயான “சிம்பா” என்ற சிங்கக்குட்டியை தற்போது பொதுமக்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிங்கக்குட்டிக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலை கால்நடை பணிப்பாளர்களால் “சிம்பா” என பெயரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றது.
இது தொடர்பாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் கலாநிதி திலக் ப்ரேமகாந்த தெரிவித்துள்ளதாவது,
ஹம்பாந்தோட்டை சபாரி பூங்காவில் சண்டி மற்றும் மீராவுக்கு பிறந்த சிம்பா, தற்போது ஐந்து வாரங்கள் நிறைவடைந்துள்ளது. பிரசவத்தின் பின் தாயால் சிம்பா நிராகரிக்கப்பட்டதையடுத்து பராமரிப்புக்காக சிம்பா தெஹிவளை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.
தற்போது கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்கள் கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வரும் சிம்பா மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் சிம்பாவை, தினமும் காலை 09.30முதல் 10.30வரையிலான நேரத்திலும் நண்பகல் 01.30 முதல் 03.30வரை பிரதான உணவகத்தின் முன்பு காணப்படும் இடத்தில் பொதுமக்கள் காணமுடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.