வவுனியா - நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.
உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் முன்னமே குழந்தை மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது.
சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பு.கஜிந்தன்