Our Feeds


Wednesday, August 30, 2023

SHAHNI RAMEES

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்...!

 

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.



இந்தியாவில் வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள உலக கிண்ண தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த ஆசிய கிண்ண 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.



இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. 



இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், பங்காளதேஷ் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் ஒரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.



ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.



இந்த தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதவுள்ளன.  இந்த போட்டி இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »