ஆர்.ராம்
மலையாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதேபோன்று முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தரமான தீர்வை எட்டுவதற்காக அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுகின்ற அனைத்து கட்சிகளையும் தனித்தனியக சந்திப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது ஜனாதிபதி மேற்படி இணக்கத்தை வெளியிட்டுள்ளதாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் குறித்த கலந்துரையாடலின் போது மனோகணேசன்,
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களின் பிரதிநிதிகளுடன் முதலில் கலந்துரையாடுங்கள் அந்த கலந்துரையாடலில் இணக்கபாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்த கட்டமாக மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அந்தந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுங்கள்.
அதில் இணக்கம் எட்டியதன் பின்னர் ஒட்டுமொத்தமாக அனைத்து சிறுபான்மை கட்சிகளையும் ஒன்றாக திரட்டி பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கு ஜனாதிபதி தனது சம்மதத்தை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.