குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றில் மாணவர்கள் 6 பேரின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலக்கப்பட்டதாகவுமு் குறித்த அறுவரும் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களது தண்ணீர் போத்தல்களில் யாரோ ஒருவித விஷத்தை கலக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் நாரம்மல குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.