ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸல பகுதியில் பஸ்ஸில் பயணித்த மாணவன் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்து சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ள்தாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடுபத்தாவ, குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பௌத்த அறநெறி பாடசாலை கல்விப் பயணத்திற்காக நேற்று மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் குறித்த மாணவர் பயணித்துள்ளார். இதன்போது, பஸ்ஸின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த மாணவன், ஜன்னலிலிருந்து தலையை வெளியில் வைத்து சென்றுள்ளார். இதன்போது, மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மாணவன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.