யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இன்று (20) அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலிகை பகுதியில் அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து மிக்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
வடமராட்சி வதிரியை சேர்ந்த 28 வயது இளைஞனும், மன்னாரை சேர்ந்த 34 வயதான இளைஞனும் உயிரிழந்துள்ளனர்.