2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகலாம் என இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரீட்சை திணைக்களத்தினால் குறிப்பிட்ட திகதி எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், வரும் நாட்களில் எந்த நேரத்திலும் முடிவுகளை வெளியாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த மாதத்தின் கடைசி 10 நாட்களுக்குள் ( ஒகஸ்ட் 21 முதல் 31 வரை) முடிவுகளை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அறிய முடிகிறது.