நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மழை பெய்துள்ள போதிலும் இதுவரை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயரவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் போதிய மழை பெய்யாததே காரணம் என்று திணைக்களம் கூறுகிறது.
இன்னுமொரு காரணம், நீண்ட வறண்ட வானிலை காரணமாக, பெறப்படும் மழை நிலத்தில் உறிஞ்சப்படுகிறது.
எனவே நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களைக் கேட்டுக் கொள்கிறது.