Our Feeds


Monday, August 28, 2023

ShortNews Admin

சவுதி அரேபியாவின் அதிரடி அறிவிப்பு - மாணவர்கள் விடுமுறை எடுத்தால் பெற்றோருக்கு சிறை



முறையான காரணம் இன்றி மாணவர்கள் பாடசாலைக்கு வராமல் விடுமுறை எடுத்தால் பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று சவுதி அரேபியாவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை விதிகளை அந்நாட்டின் அரசு கடுமையாக்கி உள்ளது.


சவுதி அரேபியாவில், மாணவர் ஒருவர் பாடசாலைக்கு எந்த காரணமும் இல்லாமல் 20 நாட்கள் வராமல் இருந்தால் அவரது பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவர் 20 நாட்களுக்கு பள்ளிக்கு வரவில்லை என்றால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்புவது பள்ளியின் பொறுப்பாகும்.

அந்த அலுவலகம் விசாரித்து பின்னர் வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பும். பெற்றோர் அலட்சியத்தால் மாணவர் பள்ளிக்கு வராதது நிரூபிக்கப்பட்டால் பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதில் ஒரு மாணவர் 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் முதல் எச்சரிக்கையும் 5 நாட்கள் விடுமுறை எடுத்தால் 2-வது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படும் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 3-வது எச்சரிக்கை அளித்து பெற்றோர் வரவழைக்கப்பட்டு உறுதி மொழியில் கையெழுத்திட வேண்டும். 15 நாட்களுக்கு வரவில்லையென்றால் அந்தமாணவர் கல்வித்துறை மூலம் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார். 20 நாட்கள் வராத பிறகு கல்வித்துறை சட்ட நடவடிக்கையை தொடங்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »