நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி முக்கொம்பன் மகா வித்தியாலயத்தின் மூன்று மாணவிகள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி தெற்கு வலயத்தில் வௌ்ளிக்கிழமை (25) இடம் பெற்ற பூநகரி கோட்ட மட்ட விவசாய வினாடி வினா போட்டியில் இப் பாடசாலை மாணவர்கள் முதல் மூன்று இடங்களையும் பெற்று தமது திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர். பு. புகழினி - 1 இடம், கே.சருஷ்ரிகா - 2 இடம், சு.பரணிகா - 3 இடம் ஆகிய இடங்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.