ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த விஜயத்தின் போது சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியென் லூங் மற்றும் ஏனைய உயர்மட்ட பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.
பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் கார்பன் நடுநிலை ஒப்பந்தமும் அவரது பயணத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி இல்லாத நேரத்தில் நியமிக்கப்பட்ட நான்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.