கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மூன்று வயது குழந்தையின் சிறுநீரக சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் இன்று (02) கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் கிருமி தொற்று காரணமாக கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதும் 03 மாதங்கள் வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்தது.
வைத்தியர்களின் அலட்சியமே குழந்தையின் மரணத்திற்கு காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்புடத்தக்கது