தென் மாகாணத்தை அச்சுறுத்தி மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் பாரிய குற்றவாளியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயாகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் உள்ள அம்பலாங்கொட டில்ஷானின் பிரதான உதவியாளர் என்பதுடன், இலங்கையில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகவும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரிடம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட வெளியேறும் வாயிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.