ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ‘அரகலய’ என்ற போராட்டத்தின்போது இளைஞர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றம் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
அதற்கேற்ப கட்சியின் யாப்பை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார்.