புணானை இராணுவ முகாம் 23ம் படைப்பிரிவின் இராணுவ
தலைமை அதிகாரி நிலந்த பிரேமரத்ன மற்றும் நாவலடி, வாகரை, தொப்பிகல ஆகிய இராணுவ முகாம்களின் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் நேற்று 2023/08/27 ஞாயிற்றுக்கிழமை அல்கிம்மா நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தனர்.இதன்போது அல்கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாறூன் ஸஹ்வி, அகீல் எமேர்ஜென்ஸி உரிமையாளரும் ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவருமான அல் ஹாஜ் நியாஸ்தீன், மற்றும் வாழைச்சேனை வர்த்தக சங்க தலைவர் றபீக் மற்றும் அதன் உறுப்பினர்கள் கல்குடா யங்க் ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் ஏ.எல்.எம். சதாம் உட்பட அதன் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது அல்கிம்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷ்ஷைக் ஹாறூன் ஸஹ்வியினால் எமது பிரதேசத்தில் அண்மைக்காலமாக பேசுபொருளாக உள்ள முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் அதிகரித்துவரும்
போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இன நல்லுறவை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகள் என பல முக்கிய அம்சங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன் முதற்கட்டமாக எதிர்வரும் நாட்களில் இரானுவத்தினரின் ஒத்துழைப்போடு இன நல்லுறவை மேம்படுத்தி, இளைஞர்களுக்கு மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், இரவு நேர கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றினை நடாத்துவது தொடர்பிலும் பேசப்பட்டது.
அதற்கு பொருத்தமான மைதானம் ஒன்றை அடையாளப்படுத்தும் வகையில் கல்குடா யங்க் ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழத்தினரின் ஆலோசனைக்கமைய மாஞ்சோலை அல் ஹிறா மைதானத்தை அனைவரும் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.