பெலாரஸில் இருந்து போலந்திற்கு சட்டவிரோதமாக செல்ல
முயற்சித்த இலங்கையர்களுடன் பல நாடுகளின் பிரஜைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை பிரஜைகள் உட்பட 160 பேர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனவரி முதல் இதுவரை 19,000 பேர் சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற உள்ளதாகவும், கடந்த ஆண்டு முழுவதும் 16,000 பேர் எல்லையை தாண்டியுள்ளதாகவும் பெலாரஸ் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.