மலையக மார்க்கத்தினூடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இஹல கோட்டை - பலான ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் குறைந்தது 7 ரயில்களின் பயண அட்டவணை தாமதமாகியதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக கொழும்பு, கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்கள் ரம்புக்கனை ரயில் நிலையம் வரை இயங்கும்.பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் கடுகன்னாவை ரயில் நிலையம் வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.