யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது.
இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
சம்பவம் குறித்து பஸ்ஸின் சாரதி கூறுகையில்,
புதன்கிழமை (23) இரவு எட்டு மணி அளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றுக் கொண்டு விமான நிலையம் நோக்கி புறப்பட்டோம்.
வியாழக்கிழமை (24) அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திடீரென தீ பற்றி கொண்டதாகவும் உடனடியாக பஸ்ஸில் இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டதுடன் வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றதாகவும் நீர்கொழும்பு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்பாடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து காரணமாக பஸ் முற்றாக எரிந்து உள்ளது. பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கொச்சிக்கடை பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.