பதுளை- பசறை டெமேரியா A தோட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் இன்றும் நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெமேரியா A தோட்டத்தில் இதுவரையில் இயங்கி வந்த தோட்ட காரியாலயத்தை டெமேரியா B தோட்டத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தே தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அறிவிக்கப் பட்டுள்ளதாகவும் உடன் இதற்கான உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு அனைத்து தொழிற்சாலைகளிடமும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுவரை காலமாக இங்கு டெமேரியா A தோட்டத்தில் இயங்கி வந்த தோட்ட காரியாலயத்தை டெமேரியா B தோட்டத்திற்கு மாற்றினால் தாங்கள் சேவைகளை பெற்றுக் கொள்ள பல மைல் தூரம் செல்ல வேண்டி வரும் எனவும் இதனால் தாங்கள் பல அசௌசரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் எனவும் தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ராமு தனராஜா