Our Feeds


Wednesday, August 9, 2023

News Editor

ரயில் விபத்து - மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!


 இன்று (09) காலை கொள்கலன் லொறியொன்று ரயிலுடன் மோதி  ஏற்பட்ட விபத்தினால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பயணிகள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கொழும்பில் இருந்து பஸ்யால சந்தியிலிருந்து மீரிகம அதிவேக நெடுஞ்சாலை வரை பயணிக்கும் வாகனங்கள் பஸ்யால சந்தியில் நுழைய முடியாது நிலையில கொழும்பு - கண்டி பாதையை பயன்படுத்த முடியும்.

இதேவேளை, திவுலப்பிட்டியிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் மீரிகம நகரிலிருந்து இடதுபுறமாகத் திரும்பி தங்கோவிட்ட மற்றும் வரக்காபொல வீதியில் நுழைந்து கொழும்பு - கண்டி பாதைக்கு பிரவேசிக்கலாம்.

மீரிகம அதிவேக வீதியில் இருந்து வௌியேறி கொழும்பு மற்றும் திவுலப்பிட்டிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஹத்தாமுல்ல சந்தியில் இடதுபுறம் திரும்பி கொழும்பு - குருநாகல் வீதி இலக்கம் 5 க்குள் பிரவேசிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்வத்த ரயில் கடவையில் இன்று காலை பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் கொள்கலன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

கொள்கலன் லொறி ரயில் கடவைக்குள் நுழைந்த போது, ​​கொள்கலன் லொறியின் இயந்திரம் திடீரென நின்றதால்  இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கொள்கலனின் சாரதி வாகனத்தை விட்டுச் வௌியேறியுள்ளதாகவும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »