வடக்கில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை பராமரிப்பதற்காக சிகிச்சை நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்ற போது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
எனினும், முற்று முழுதாக போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை நீண்ட காலமாக பராமரிக்கும் நிலையம் வடக்கில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிகிச்சை அளிப்பதற்கான நிலையமொன்றை வடக்கில் அமைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநரும் முயற்சிகளை எடுத்துவருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.