மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் போலியான வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று வியாழக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் மற்றும் அவரது ஆவணங்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.