கொடுக்கப்பட்ட இடமாற்றங்களின்படி பணியாற்றாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இடமாற்ற உத்தரவுக்கு அமைய ஆசிரியர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.