அவுஸ்திரேலியாவிலிருந்து மலேசியாவிற்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் நடுவானில் இடம்பெற்ற சம்பவம் உடனடியாக விமானம் சிட்னி திரும்பியது
நடுவானில் இடம்பெற்ற சம்பவம் காரணமாக 45 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் - இந்த சம்பவம் காரணமாக மலேசியாவிற்கு புறப்பட்ட விமானம் சிட்னி திரும்பியுள்ளது.
சிட்னியின் விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
விமானஓடுபாதையில் இந்த சம்பவம் இடம்பெற்றது என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன,
மலேசியா எயர்லைன்சின் 122 சிட்னியிலிருந்து கோலாலம்பூரிற்கு புறப்பட்டதாகவும் ஆனால் பயணியொருவரால் அது திரும்பி வந்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகின்றன.