ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் , அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை(2) புறக்கோட்டையிலுள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக கட்சியின் செயற்குழு கூடவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழாவையும் கட்சி மாநாட்டையும் செப்டம்பர் 10 ஆம் திகதி நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு எடுத்த தீர்மானத்திற்கு நாளை நடைபெறவுள்ள செயற்குழுவில் அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது என கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.