வெள்ளவத்தை குரே மைதானத்தில் நடைபெற்ற பாடசாலை உதைப்பந்தாட்ட போட்டியின் போது கொழும்பு, ஸாஹிரா கல்லூரி மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐந்து பேரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (08) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த ஐந்து சந்தேக நபர்களும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கல்கிசை நீதவான் கோசல சேனாதீர உத்தரவிட்டுள்ளார்.
பொரளை வெஸ்லி கல்லூரி மற்றும் மருதானை ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி வெள்ளவத்தை குரே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியின் இறுதியில் போட்டியை பார்வையிட வந்த பார்வையாளர் குழுவுக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் சுமார் 40 மாணவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட ஐவரும் வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றன.