முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வ பணிகளுக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் 21.8.2023 அன்று திட்டமிடப்பட்டிருந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று (17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சட்டத்தரணி வி கே நிரஞ்சன், தொல்பொருள் திணைக் களத்தினுடைய முல்லைத்தீவு வலய பொறுப்பதிகாரி ஆர் ஜி ஜே பி குணதிலக, கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் எம். அஜந்தன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி உள்ளிட்ட தரப்பினர் வழக்கு விசாரணைகளில் ஆஜராகியிருந்தனர்.