ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
வரைவு கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு எதிராக பொய்யான மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக ஹேஷா விதானகேவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.