2020 தேர்தலை சட்டவிரோதமாக மாற்றியமைக்க திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அட்லாண்டா சிறையில் சரணடைந்தார்
20 நிமிடங்கள் சிறையில் இருந்த அவர் அவர் $200,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரது கைதி எண். P01135809.வழக்கு விசாரணை மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணையின் போது ட்ரம்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்படலாம் என்று கருதப்பட்டது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து ட்ரம்ப் அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். ட்ரம்ப் உட்பட 18 பேருக்கு எதிராக தேர்தல் முறைகேடு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.