பல அமைச்சுக்களை இணைத்து அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை உள்ளடக்கி விவசாய நவீனமயமாக்கலுக்கான செயலணியொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
விவசாய, பெருந்தோட்ட மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்கள் ஒன்றிணைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒன்பது மாகாண சபைகளின் வளங்களைக் கொண்டு விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை வினைத்திறனுடன் தீர்க்கும் நோக்கில் இந்த ஒன்றிணைப்பு மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.