நகர சபை குப்பை உழவு இயந்திரத்தில் குப்பையோடு
குப்பையாகப் போடப்பட்ட எட்டு பவுண் தங்க நகைகளை உரியவர்களிடம் கண்டெடுத்து வழங்கிய மகிழங்கேணி இளைஞன்.இன்று தமது நகை குப்பையோடு போடப்பட்டுவிட்டதாக சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்தவர்கள் நகர சபை ஊழியர்களை அணுகிய நிலையில் நகர சபையின் சுகாதார தொழிலாளிகளினால் தேடுதல் மூலம் கண்டெடுக்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மகிழங்கேணியைச் சேர்ந்த நகர சபையில் நீண்ட காலம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக சுகாதார தொழிலாளியாகக் கடமையாற்றும் திரு. சண்முகம் தமிழ்சன் மூலம் கண்டெடுக்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டை பலரும் பாராட்டினர். எமது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்.