மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (07) இடைக்கிடை மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டின் பல பாகங்களில் பெரும்பாலும் வறட்சியாக காலநிலை நிலவும் எனவும் இதன்போது நீரை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து ஏனைய பணிகளுக்கு நீரின் பயன்பாட்டை மட்டுப்படுத்தி பயன்படுத்துவதன் ஊடாக வறட்சியான காலப்பகுதியில் அநாவசிய இன்னல்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.