மாத்தளை ,எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ,ரத்வத்த கீழ்பிரிவில் லயன் குடியிருப்பில் இருந்த மக்களின் தற்காலிக வீடுகளை அந்த தோட்டத்தின் உதவி முகாமையாளர் அடித்து உடைக்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த குடியிருப்பில் இருந்த மூன்று குடும்பங்கள் உள்ளடங்களாக
14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்த நிலையில்,தமக்கு வீடொன்றையோ, வீடமைக்க காணித்துண்டொன்றையோ வழங்குமாறு பல வருடங்களாக பல தோட்ட முகாமையாளர்களிடம் இக்குடும்பத்தினர் கேட்டு வந்துள்ளனர்.அவ்வகையில் தற்போதுள்ள முகாமையாளருக்கு முன்பிருந்தவர் , ஒரு இடத்தைக்காட்டி இங்கு வீடமைத்துக்கொள்ளுங்கள் என அனுமதி வழங்கிய நிலையில் ,குறித்த குடும்பத்தினர் வாழைமரம் உள்ளிட்ட சில பயிர்களையும் அவ்விடத்தில் நாட்டியதுடன்,ஒரு கிழமைக்கு முன் அவ்விடத்தில் தற்காலிக குடியிருப்பொன்றை அமைத்துள்ளனர்.