Our Feeds


Sunday, August 6, 2023

News Editor

வியப்பூட்டும் வகை புழு கண்டுப்பிடிப்பு


 வியப்பூட்டும் வகை புழுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சைபீரியாவில் பனி மூடிய வனப்பகுதியில் 46,000 ஆண்டுகள் பழமையான இந்த புழு இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


இந்த உறங்கும் புழுக்களுக்கு விஞ்ஞானிகளால் தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்பட்டதன் பிறகு அவை உறக்கநிலையிலிருந்து வெளியே வந்து இயல்பு நிலைக்குத் திரும்பின.


விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த புழு ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் கடைசி பாதியில் இருந்து ஒரு விலங்கு இனமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகளைப் போன்ற கம்பளி மமத்துகள் இந்தக் காலத்தில் வாழ்ந்தன.


இந்த புழுக்களுக்கு விஞ்ஞானிகள் காலத்தை கடந்து செல்லக்கூடிய அற்புதமான புழுக்கள் என்று பெயரிட்டுள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »