அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தரவளை தோட்டத்தில், கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபர் ஒருவரை, அட்டன் பொலிஸார், கைது செய்துள்ளனர்.
அட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த சந்தேக நபரின் வீட்டுப் பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார், அங்கு தேடுதலில் ஈடுப்பட்ட போது, பூந்தோட்டத்தில் வளர்க்கப்பட்ட இரண்டரை அடி உயரமான ஒரு கஞ்சா செடி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இவரை அட்டன் நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
(எஸ்.கணேசன்)