அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் உலக செஸ் போட்டி நடைபெறுகிறது. அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுடன் மோத இருக்கிறார்.
18 வயதை எட்டிய பிரக்னாநந்தா, பாபி பிஷர் , மேக்னஸ் கார்ல்சனுக்குப் பிறகு கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இளையவர் ஆவார். 2005 ஆம் ஆண்டு நாக் அவுட் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.