ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அக்கடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் பயணிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆசியப் போட்டிகள் சீனாவில் வரும் செப்ரெம்பர் 23ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை நடக்கவுள்ளது. இதில் முதல்முறையாக கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆசியப் போட்டிகள் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உட்பட மொத்தமாக 18 அணிகள் பங்கேற்க உள்ளன.
ஆசியப் போட்டிகளின் நாக் அவுட் ,இறுதிப்போட்டிகள் நடக்கும் போது, உலகக் கிண்ணத் தொடர் தொடங்கியிருக்கும். இதனால் ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணியுடன் எந்த பயிற்சியாளர்கள் குழு பயணிக்கும் என்று தெரியாமல் இருந்தது. இந்திய அணியுடன் விவிஎஸ் லக்ஷ்மண் பயணிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.