ரஷ்ய ஜனாதிபதி சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ள இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்த மாதம் துருக்கி வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் திகதி இன்னும் முடிவாகவில்லை என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவிக்கையில்,
திகதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், வெளிநாட்டுத்துறை அமைச்சர் புலனாய்வுத்துறை அமைப்பின் தலைவர்கள் புதின் வருகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதை வைத்து பார்க்கும்போது, இந்த மாதத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இரு தலைவர்கள் தொலைபேசி மூலம் உரையாடினர்.அப்போது புதின், துருக்கி வருகையை எர்டோகன் ஏற்றுக்கொண்டார்.
புதின் வருகையின்போது கருங்கடல் தானிய ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.