பயணச்சீட்டு வழங்காத இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட வேலைத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தபடவுள்ளது.
இதனை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் மோசடிகளே இ.போ.சபை நட்டமடைய முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த மோசடிகளை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இ.போ.ச வருமானத்தில் ஒரு பகுதியை சாரதிகளும் நடத்துனர்களும் பகிர்ந்து கொள்வதாகவும், இது அன்றாட நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இ.போ.ச நாளொன்றுக்கு பெற வேண்டிய 100 இலட்சம் ரூபாவை சாரதிகளும் நடத்துனர்களும் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிடுகின்றார்.
இ.போ.ச பேருந்தில் ஏறிய பின்னர் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளுமாறும், பயணச்சீட்டு கிடைக்காவிட்டால் புதிய முறைமையின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.