அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மேற்கொண்டிருந்த எதிர்ப்பு பேரணியின் போது, கைது செய்யப்பட்ட 22 மாணவர்களும் பிணையில் விடுவிக்கபட்டடுள்ளனர்.
குறித்த மாணவர்கள் நீதிபதி முன்னிலையில் நேற்றிரவு (10) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கபட்டுள்ளனர்.
தலா 25000 ரூபா சரீரபிணையில் அவர்களை விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எனவே ,எதிர்வரும் 14 ஆம் திகதி அவர்களை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று கிருலப்பனை மற்றும் விஹாரமஹா தேவி பூங்கா ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்ட மாணவர் பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் முன்னெடுக்கபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.