பேருவளை பதானகொட கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன் கல்வி கற்கும் இரண்டு சிறுவர்களின் பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டிலுள்ள அனைவரும் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு தொலைகாட்சி பார்ப்பதற்கு சென்றிருந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும் குறித்த சிறுவர்களின் பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.