Our Feeds


Sunday, August 13, 2023

ShortNews Admin

A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிவிட்டதா? - உண்மை என்ன?



க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிவிட்டதாக சமூக ஊடகங்களில் பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் (Fact Crescendo Sri Lanka) தெரிவித்துள்ளது.


இதுவரை பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.


க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஓகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜயசுந்தர கூறியதாகவும் உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »