பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வன்முறை போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பிணை கோரி இம்ரான் கான் தரப்பில் நீதிமன்றங்களில் பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவற்றில் 9 பிணை மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 3 பிணை மனுக்களை இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றமும், 6 மனுக்களை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது.
கருவூல பரிசுப் பொருட்களுக்கான போலி சீட்டு தொடர்பான வழக்கில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் இடைக்கால பிணை செப்டம்பர் 7 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.