ஆயிரம் தேசிய பாடசாலைகள் என்ற திட்டத்தில் இதுவரை 22 பாடசாலைகள் மாத்திரமே, தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும், குறித்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பாரிய நிதிக்கு என்ன நடந்தது எனவும் யாழ்ப்பாண ஊடக மையத்தில் அவர், இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.